உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
டெல்லி,
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 5,12,18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி முறை 5 மற்றும் 18
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5,18 மற்றும் 40 சதவீதம் என 3 அடுக்குகளாக மாற்றப்பட்டது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது,
நவராத்திரியின் முதல் நாளில் இருந்து வருமான வரி உச்சவரம்பு விலக்கில் இருந்து ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா தொடங்குகிறது. இது நிறைய மக்களுக்கு இரட்டை போனஸ் ஆகும். தன்னிறைவு இந்தியாவின் முக்கிய படியை நாம் நவராத்தியின் முதல் நாளில் (நாளை) எடுத்து வைக்கிறோம்.
நாளை சூரியன் உதிக்கும்போது அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி சேமிபு திருவிழா நாளை தொடங்குகிறது. பொருட்களை நீங்கள் சுலபமாக வாங்க முடியும். ஏழைகள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள் , விவசாயிகள், வர்த்தகர்கள், கடைக்காரர்கள் உள்பட அனைவரும் பலன் பெறுவார்கள். இது திருவிழாக்களின் காலம் அனைவரின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நாட்டு மக்கள் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி விற்க வேண்டும். அதில் மக்கள் பெருமைகொள்ள வேண்டும். சுதேசி இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றியது. அதேபோல் நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் முக்கிய பங்காற்றுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.






