இங்கிலாந்து மன்னர் பரிசு: கடம்ப மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று முன்தினம் 75வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அவருக்கு உலக தலைவர்கள், நம் நாட்டு தலைவர்கள், பாஜகவினர், பொது மக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக்கன்று ஒன்றை அனுப்பி வைத்து இருந்தார். இன்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார். இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்ற போது, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






