பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்...!

பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பாட்னா,
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார்.
பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
குறிப்பாக, வைஷாலி - தியோரியா ரெயில் பாதை, வந்தே பாரத் ரெயில் சேவை, ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு, துணை மின் நிலையங்கள் உள்பட 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உள்பட பலர் கலந்துகொண்டனர். பீகாரில் ஐக்கிய ஜனாதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.