பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி; பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்...!

பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது.
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி; பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்...!
Published on

டெல்லி,

பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணைத்தொகை விவசாயிகளுக்கு நாளை விடுவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்தவாறு காணொலி காட்சி மூலம் பிற பகுதிகளுக்கும் பி.எம்.கிசான் திட்டத்தின் தவணைத்தொகையை விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 21வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 21வது தவணைத்தொகையாக மொத்தம் ரூ. 18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com