ராமதாசுக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

வேறு அலுவல்கள் இருந்ததால் பிறந்தநாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டதாக ராமதாசிடம் பிரதமர் கூறினார்.
புதுடெல்லி,
பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 25-ந்தேதி தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ராமதாசுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, "உங்கள் பிறந்தநாளான ஜூலை 25- ஆம் தேதி, எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் அன்றைய நாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டது" என்று பிரதமர் தெரிவித்தார். அதற்கு பிரதமரிடம் "நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்" என்று பிரதமரை ராமதாஸ் வாழ்த்தினார்.
ராமதாசின் வாழ்த்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, "முன் மாதிரியாக நீங்கள் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்" என்று ராமதாசை வாழ்த்தினார்.
Related Tags :
Next Story






