கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி


கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி
x

பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி கருப்பு சட்டை அணிந்தபடி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாட்னா,

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, வாக்காளர் அதிகாரம் என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி முதல் யாத்திரை நடத்தி வருகிறார். சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரை, நாளை பாட்னாவில் நிறைவடைகிறது.

இந்தநிலையில், ஆர்ரா பகுதியில் பிரசாரத்தில் ராகுல்காந்தி ஈடுபட்டார் அப்போது, பாஜக இளைஞர் அணி (BJYM) செயற்பாட்டாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி அசைத்தும், அவரை எதிர்த்து கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது, ராகுல் காந்தியின் வாகனம் சென்றபோது, கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர்களில் ஒருவரை அவர் தன் பாதுகாப்பு பணியாளர்களிடம் அனுமதி அளித்து அருகில் அழைத்தார். அவருடன் சுருக்கமாக பேசிய பின், அவருக்கு சாக்லெட் கொடுத்து அனுப்பினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், சில நாட்களுக்கு முன்பு நவாடாவில் யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபோது, அவர் சிரித்தபடியே (flying kisses) கொடுத்து எதிர்த்து, நின்ற கூட்டத்தில் பதற்றத்தை குறைத்தார்.

டர்பாங்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் குறை கூறியதாக காங்கிரஸ் மீது பாஜக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து பாட்னாவில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், காங்கிரஸ் செயற்பாட்டாளர் முகமது ரிஸ்வி கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story