ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் மர்ம மரணம்


ராஜஸ்தான்:  நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் மர்ம மரணம்
x

courtesy:  பேஸ்புக்

வார்டன் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையில் மயங்கிய நிலையில் ரோஷன் கிடந்துள்ளார்.

கோட்டா,

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் ஜாரதா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபய்பூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் குமார் பத்ரா (வயது 24). ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இதற்காக ராஜீவ் காந்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளார்.

ரோஷனின் உறவுக்கார மாணவர் ஒருவரும் அவருடன் படித்து வந்துள்ளார். இந்நிலையில், இரவில் நண்பர்களுடன் சேர்ந்து ரோஷன் ஒன்றாக படித்துள்ளார். ஆனால், மறுநாள் காலையில் அவருடைய அறை கதவை திறக்கவில்லை. அவர் தூங்கி கொண்டிருப்பார் என நினைத்து விட்டு மற்றவர்கள் சென்று விட்டனர். ஆனால், மதிய உணவு வேளையிலும் அவர் வெளியே வரவில்லை. இதனால், கதவை தட்டினர். ஆனால், கதவு பூட்டப்பட்டு இருந்ததுடன், உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

இதுபற்றி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையில் மயங்கிய நிலையில் அவர் கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் முன்பே உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அவருடைய தந்தை கூறும்போது, ரோஷனின் ஆடைகள் களையப்பட்டு இருந்தன. வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது என கூறினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story