ரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்


ரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 5 Nov 2024 11:00 AM IST (Updated: 7 Nov 2024 12:25 PM IST)
t-max-icont-min-icon

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம் என்று அந்த செய்தியில் கூறியுள்ளார்.

மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர். கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story