சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இருவர் கைது

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமிக்கு, 2 வாலிபர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், சிறுமியிடம் நைசாக பேசி அழைத்து சென்றனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த சிறுமிக்கு, 2 வாலிபர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஒசக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த சிறுமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒசக்கோட்டையை சேர்ந்த அப்துல் மற்றும் அயாஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






