முன்னாள் முதல்-மந்திரி குறித்து சர்ச்சை கருத்து; 6 போலீசார் சஸ்பெண்டு


முன்னாள் முதல்-மந்திரி குறித்து சர்ச்சை கருத்து; 6 போலீசார் சஸ்பெண்டு
x

சர்ச்சை கருத்து தொடர்பான பதிவை போலீசார் தங்கள் சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் பிரதீப். இவர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குறித்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை கருத்து தொடர்பான பதிவை மேலும் சில போலீசார் தங்கள் சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவராஜ் சிங் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி., முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட பிரதீப் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story