போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பு விழிப்புணர்வு: மத்திய பிரதேச போலீசாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்

Image Courtesy : @DGP_MP
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பேசுவதற்காக மத்திய பிரதேச டி.ஜி.பி. கைலாஷ் மக்வானாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போபால்,
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் அந்த மாநில போலீசார் தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜூலை 15-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை நடந்த இந்த பிரசாரத்தில் 23 லட்சம் தன்னார்வலர்கள் நேரடியாகவும், சுமார் 6¼ கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பங்கு பெற்றனர்.
இதனால் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பிடித்தது. இந்த நிலையில் போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மத்திய பிரதேச போலீசாரை இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவிக்க உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அடுத்த மாதம்(செப்டம்பர்) நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பேசுவதற்காக மத்திய பிரதேச டி.ஜி.பி. கைலாஷ் மக்வானாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






