எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டின் 3-ம் நிலைக்கான சோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டின் 3-ம் நிலைக்கான சோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x

கோப்புப்படம் 

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டின் 3-ம் நிலைக்கான சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 3 நிலைகளை கொண்ட 'சிறிய செயற்கைக்கோள் ஏவ பயன்படும் ராக்கெட்'-ஐ (எஸ்.எஸ்.எல்.வி.) வடிவமைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள, 'திடமோட்டார் நிலையான சோதனை மையத்தில்', திட எரிபொருட்களை கொண்ட இந்த வகை ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட 3-ம் நிலைக்கான நிலையான என்ஜின் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் என்பது தொழில்துறையினருக்கு உற்பத்தி அதிகரிப்பதற்கு உகந்த வகையில் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப ஏவுதல் திறன்களை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 'தேவைக்கேற்ப ஏவுதல்' என்ற அடிப்படையில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை அல்லது 3-ம் நிலை திட மோட்டார் ஏவுதளத்திற்கு 4 கிலோ மீட்டர் வேகத்தை வழங்குகிறது.

ராக்கெட்டின் சுமை திறனையும் நேரடியாக 90 கிலோ வரை மேம்படுத்துகிறது. அளவிடப்பட்ட அனைத்து அளவுருக்களும் 108 வினாடிகள் சோதனையில் வெற்றிகரமாக செயல்பட்டன. இந்த சோதனையில் எஸ்.எஸ்.3 மோட்டாரின் மேம்படுத்தப்பட்ட பகுதி ராக்கெட் ஏவுதலுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிக வலிமை கொண்ட, கார்பன் இழை கொண்ட மோட்டார் கியாஸ் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் திட மோட்டார் ஸ்ரீஹரிகோட்டாவில் வார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமான முறையில் முடிந்துள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

1 More update

Next Story