கைதிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


கைதிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலையில் தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் 2005-ம் ஆண்டு சோஹன் சிங் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்ற ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கிடையே 2017-ம் ஆண்டில் மேல்முறையீட்டுக்கு பின் அவரது தண்டனை காலம் 7ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

ஆனால், 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலையில் தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார். மொத்தம் சுமார் 11 ஆண்டுகள் 7 மாதங்கள், சோஹன் சிங் சிறையில் இருந்துள்ளார். அவரது தண்டனை காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட போதிலும் கூடுதலாக 4.7 ஆண்டுகள் சிறையில் இருந்தார். கூடுதல் காலம் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்த சோஹன் சிங்கிற்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க மத்திய பிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story