பீகார் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி போலீஸ் அதிகாரி காயம்


பீகார் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதி போலீஸ் அதிகாரி காயம்
x

உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்

பாட்னா,

சீக்கிய மதகுருவான குரு கோவிந்த சிங்கின் 359வது பிறந்தநாளையொட்டி பாட்னாவில் உள்ள சாகீப் குருத்வாராவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குருத்வாராவில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று குருத்வாராவுக்கு சென்றுள்ளார். அவருக்கு பாதுகாப்பிற்காக 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாதுகாப்புப்படையினர், போலீசார் சென்றனர்.

இந்நிலையில், பாட்னாவின் டிடர்கஞ்ச் பகுதியில் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சாலையில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸ் அதிகாரி மீது மோதியது. வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும்போது அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸ் டிஎஸ்பி மீது மோதியது. இந்த சம்பவத்தில் டிஎஸ்பிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிஎஸ்பி நின்றுகொண்டிருந்ததை கவனிக்காமல் வாகன டிரைவர் ரிவர்ஸ் எடுத்ததே விபத்து காரணம் என்பது தெரியவந்துள்ளது.

1 More update

Next Story