திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி காணிக்கை அளித்த ஈரோடு பக்தர்...!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண் பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை அளித்துள்ளார். இந்த காணிக்கை தொகையை திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம்கீழ் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்துமாறு அந்த பக்தர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






