மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டம்


மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டம்
x

சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று தாசில்தார் உறுதியளித்தார்

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் கனமழை பெய்தது. கனமழையால் கசாநகர் - டகிகான் சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது.

அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ - மாணவியர் இந்த சாலை வழியாக செல்வது வழக்கம். ஆனால், கனமழையால் சாலை குண்டும் குழியுமான தண்ணீர் தேங்கி இருந்ததால் மாணவ-மாணவியர் மிகுந்த சிரமம் அடைந்தனர். சாலையை சீரமடைத்து தருமாறு கிராமத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர்.

இந்நிலையில், சேதமடைந்த சாலையை சீரமைத்து தரும்படி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்த தாசில்தார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, மாணவ - மாணவியர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

1 More update

Next Story