சீமானுக்கு எதிரான வழக்கில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை- நடிகை தரப்பு


சீமானுக்கு எதிரான வழக்கில் பேச்சுவார்த்தைக்கு  இடமில்லை- நடிகை தரப்பு
x
தினத்தந்தி 22 July 2025 5:27 AM IST (Updated: 22 July 2025 6:10 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது

புதுடெல்லி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் பிரபல நடிகை புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2023-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.மனுதாரர் சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஜதீன்பரத்வாஜ் ஆஜராகி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்றும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் கோரினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நடிகை அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து, பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story