மத்திய ரெயில்வே மந்திரியுடன் திருமாவளவன் சந்திப்பு

ஜன் சதாப்தி விரைவு ரெயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய ரெயில்வே மந்திரியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இன்று ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து சிதம்பரம் தொகுதிக்கான கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
1.சிதம்பரம்: கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கும் ஜன் சதாப்தி விரைவு ரெயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.
2.பரங்கிப்பேட்டை: ரெயில் எண் 20605/20606 மற்றும் விரைவு ரெயில் எண் 16103/16104 ஆகியவை பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






