பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு; ராஜஸ்தானில் 3 பேர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பவர்கள் சிலர் பதுங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பயங்கரவாத எதிர்ப்புப் படை, மத்திய புலனாய்வுப் பிரிவினர் மாநிலம் முழுவதும் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிகையில் சந்தேகப்படும் படி மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஜோத்பூரில் சவுகா பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள், ஜெய்சால்மரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து செல்போன்கள், பல முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. புலனாய்வு அமைப்புகள் அவர்களின் வெளிநாட்டு வலையமைப்பு பயங்கரவாத தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
Related Tags :
Next Story






