உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி நியமனம்

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை வழிநடத்தும் 4-வது குர்மி இன தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆவார்.
உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி நியமனம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தின் அடுத்த பா.ஜ.க. தலைவராக மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரியை பா.ஜ.க. தலைமை நியமனம் செய்துள்ளது. 61 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினரில் ஒன்றான செல்வாக்கு மிக்க குர்மி சமூகத்தை சேர்ந்தவர்.

மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை வழிநடத்தும் 4-வது குர்மி இன தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆவார். கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் தொகுதியிலிருந்து 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கஜ், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். புதிய மாநில பா.ஜ.க. தலைவர் நியமனத்தை லக்னோவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com