கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!


கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!
x
தினத்தந்தி 20 Jun 2025 12:23 PM IST (Updated: 20 Jun 2025 12:32 PM IST)
t-max-icont-min-icon

இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கில்வான் (விவசாயி). இவர் அரியானா மாநிலம் ஷாஹாபாத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆரம்பத்தில் காலத்தில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடந்த இல்லற வாழ்க்கை, ஒரு கட்டத்தில் தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.

அதாவது, விவசாயின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் விஷயம் கணவருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மனைவியை விவசாயி கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளக்காதலை கைவிட அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கள்ளக்காதலனை சந்திக்க பெண் சென்றுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் கணவர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, கள்ளக்காதலனும் அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கணவர், கள்ளக்காதலனின் வீட்டிற்கு சென்று, தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ கணவரின் பேச்சை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கள்ளக்காதலனை தாக்கினார்.

பின்னர் தனது பேச்சைக் கேட்காத மனைவியை தாக்கி, அவரது மூக்கை கடித்து துப்பிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வலியால் கதறி துடித்த பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பெண்ணின் மூக்கு பகுதியில் அதிக ரத்தம் வருவதை கண்ட அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு லக்னோவின் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மூக்கை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிஜிஐ மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story