உ.பி.யில் அவலம்; 11-ம் வகுப்பு மாணவி மாந்தோப்பில் 5 பேர் கும்பலால் பலாத்காரம்

சம்பவம் பற்றி வேறொரு உறவுக்கார ஆண் நண்பரிடம் அந்த மாணவி தகவல் தெரிவித்து உள்ளார்.
உ.பி.யில் அவலம்; 11-ம் வகுப்பு மாணவி மாந்தோப்பில் 5 பேர் கும்பலால் பலாத்காரம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார். இதன்பின்னர் நேற்று இரவு நண்பர் ஒருவரின் பைக்கில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவர்கள் இருவரும் மாந்தோப்புக்கு சென்று நீண்டநேரம் பேசி கொண்டிருந்தபோது, உள்ளூரை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை பார்த்து நெருங்கியது.

அவர்கள் அந்த வாலிபரை அடித்து, துரத்தி விட்டு மாணவியை தனியாக இழுத்து சென்றனர். அந்த மாணவி மாந்தோப்புக்குள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபற்றி யாரிடமும் கூற கூடாது என மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதுபற்றி வேறொரு உறவுக்கார ஆண் நண்பரிடம் அந்த மாணவி தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி பந்தாரா காவல் நிலைய உயரதிகாரி ராணா ராஜேஷ் குமார் கூறும்போது, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். அந்த கும்பல் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com