உத்தரபிரதேசம்: வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து


உத்தரபிரதேசம்:  வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து
x

தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் யாரும் விபத்தில் சிக்கவில்லை.

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து 12 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வாகன நிறுத்துமிடத்தை சுற்றி நின்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் யாரும் விபத்தில் சிக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் பெருமளவில் பொருட்சேதம் எற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story