துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை


துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை
x

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அவற்றை கிடப்பில் போட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை கடந்த மாதம் (ஜனவரி) 17-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, 'துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் முட்டுக்கட்டை அடுத்த விசாரணைக்குள் தீர்ந்துவிட்டால் நல்லது, இல்லையென்றால் தீர்த்து வைக்கப்படும்' என தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.

1 More update

Next Story