விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபர் - ரூ. 57 ஆயிரம் அபராதம்


விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபர் - ரூ. 57 ஆயிரம் அபராதம்
x

விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் இயக்கப்படுவது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரை ஓட்டிய நபர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்றார். மேலும், நகரின் முக்கிய சாலையில் சாகசம் செய்வதுபோல் ஆபத்தான முறையில் காரை இயக்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபருக்கு கிரேட்டர் நொய்டா போலீசார் அபராதம் விதித்துள்ளனர். சமூகவலைதளத்தில் வைரலான அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த காரின் பதிவெண் அடிப்படையில் அதன் உரிமையாளருக்கு நொய்டா போக்குவரத்து போலீசார் 57 ஆயிரத்து 500 ரூபாய் விதித்துள்ளனர்.

1 More update

Next Story