தேர்தல் பிரசாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தோம் - செல்வப்பெருந்தகை பேட்டி

இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம் என செல்வப்பெருந்ததை கூறினார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று டெல்லியில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டம் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்றது. தலைவர் ராகும் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழ்நாடு வருகை இது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
தேர்தல் பிரசாரம், தேர்தல் மாநாடு, கிராம கமிட்டி தலைவர்கள் சந்திப்பு. தேர்தலின் உத்திகளை ஒரு புரிதலோடு பேசி முடித்திருக்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு டெல்லியில் அகில இந்திய தலைவருடன் கூட்டம் நடக்க இருந்தது. இன்று அவருடன் நடக்க இருந்த கூட்டம் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்து விவாதித்தோம். இந்த கூட்டத்தில் எப்படி வரப்போகும் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்து ஆலோசித்தோம்.
இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எத்தனை முணை போட்டி வந்தாலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெரும். இந்தியா கூட்டணி 45 விழுக்காடு வாக்கு வங்கியுடன் வலிமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






