டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு


தினத்தந்தி 5 Feb 2025 7:03 AM IST (Updated: 5 Feb 2025 6:37 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு இடைத்தேர்தல், டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ல் எண்ணப்படுகின்றன.

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் ஆர்வமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். மேலும் டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ல் எண்ணப்படுகின்றன. டெல்லி சட்டசபைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

* டெல்லி சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 33.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெல்லி சட்டசபை தேர்தலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் வாக்களித்தார்.

* முன்னதாக மத்திய மந்திரிகள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அதிஷி ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

* டெல்லி சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

*டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, புதுடெல்லியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார்

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, புது டெல்லியில் உள்ள கல்காஜியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி வேட்பாளருமான அதிஷி தனது மை விரலைக் காட்டுகிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, புது டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்த பின்னர், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா தனது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ரா மற்றும் மகன் ரைஹான் வத்ராவுடன்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, புதுடெல்லியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அழியாத மையால் குறிக்கப்பட்ட தனது விரலைக் காட்டுகிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, இன்று புதுடெல்லியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்த பின்னர், முன்னாள் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன்.


Next Story