வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க உள்ளோம் - ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு என்ற புகார், உண்மை என்பதால்தான் காட்டுத் தீ போல பரவி வருகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரேபரேலி,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. பீகாரில், ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார். இந்நிலையில், ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம். வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை தான் வழங்க உள்ளோம்.
"மராட்டியம், அரியானா மற்றும் கர்நாடகாவில் தேர்தல்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளது. நாங்கள் கருப்பு-வெள்ளை ஆதாரங்களை வழங்கியுள்ளோம். வரும் காலங்களில், நாங்கள் இன்னும் துடிப்பான, வெடிக்கும் ஆதாரங்களை வழங்குவோம். வாக்கு சோர், காடி சோட்" என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
மத்திய பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான வெள்ளை மற்றும் கருப்பு ஆதாரங்களை நாங்கள் அளித்திருக்கிறோம். நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த் மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிடுவோம், வாக்குத் திருட்டு என்ற புகார், உண்மை என்பதால்தான் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
வாக்குகளைத் திருடித்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது என்பது உண்மை. பாஜக தலைவர்கள், இதற்கு எதிரானப் போராட்டத்தை நிறுத்த வேண்டும், ஏனென்றால் ஹைட்ரஜன் குண்டு, அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






