மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்


தினத்தந்தி 25 July 2025 7:39 AM IST (Updated: 25 July 2025 4:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான திமுக உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


Live Updates

  • 25 July 2025 1:47 PM IST

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

    இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த நாடாளுமன்ற முடக்கம் இன்றும் 5-வது நாளாக நீடித்தது.

    இதன்படி மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதுகுறித்து அவையில் விவாதிக்கக்கோரி கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டதுடன், அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளியால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 

  • 25 July 2025 11:37 AM IST

    மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு

    மாநிலங்களவைக்கு தேர்வான திமுகவை சேர்ந்த சிவலிங்கம், சல்மா, வில்சன் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

  • 25 July 2025 11:27 AM IST

    மாநிலங்களவையிலும் தொடர் அமளி - 12 மணி வரை அவை ஒத்தி வைப்பு

    எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

  • 25 July 2025 11:21 AM IST

    மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்

    மாநிலங்களவை எம்.பி.யாக திமுக கூட்டணி சார்பில் தேர்வான மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

    நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மநீம தலைவர் கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் #கமல்ஹாசன் எனும்_நான் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  • 25 July 2025 11:14 AM IST

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு


    சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

    இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த நாடாளுமன்ற முடக்கம் நேற்றும் 4-வது நாளாக நீடித்தது.

    இந்நிலையில் மக்களவை இன்று காலையில் கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதுகுறித்து அவையில் விவாதிக்கக்கோரி கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டதுடன், அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

  • 25 July 2025 11:10 AM IST

    பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராக இந்திய கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பினர்.

  • 25 July 2025 11:07 AM IST

    மாநிலங்களவைக்கு எம்.பி.களாக தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு

    தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

    அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதனால் நேற்று மாநிலங்களவை சுமுகமாக நடந்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதவியேற்கின்றனர். இவர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

    இந்நிலையில் அதிமுகவின் இன்பதுரை, தனபால் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, ராஜ்யசபா எம்.பி ஆக கமல்ஹாசன் பதவி ஏற்க உள்ள நிலையில், நேற்றைய தினம் டெல்லி சென்றார். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, வில்சன் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன், முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story