2 பிள்ளைகளை கொன்று இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் நவ்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஷ். இவரது மனைவி அஸ்மிதா சோலங்கி (வயது 32). இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தன.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது சோலங்கி தனது 2 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் சோலங்கி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 2 பிள்ளைகளையும் கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






