3 வயது மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

பாலத்தில் இருந்து மகனுடன் , ரீமா ஆற்றில் குதித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியை சேர்ந்தவர் ரீமா (வயது 30). இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் இருந்தார். இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்த ரீமா கடந்த 3 ஆண்டுகளாக மகனுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், ரீமா இன்று அதிகாலை 1 மணியளவில் தனது ஸ்கூட்டரில் மகனை அழைத்துக்கொண்டு பயங்கடியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாலத்தில் இருந்து மகனுடன் , ரீமா ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவினருக்கு இன்று காலை தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், தீவிர தேடுதலுக்குப்பின் ரீமாவை சடலமாக மீட்டனர். ரீமாவின் மகன் உடல் இதுவரை கிடைக்காத நிலையில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மகனுடன், ரீமா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






