வாலிபருடன் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி... திடீரென வந்த கணவர்... அடுத்து நடந்த பரபரப்பு

சந்தோஷுக்கும் திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கும், மூங்கில்மடா பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர். இது கள்ளக்காதலாக மாறியது.
அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமி (45) வேலைக்கு சென்ற பின்னர், சந்தோஷ் வீட்டுக்கு சென்று பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த ஆறுச்சாமி கள்ளக்காதலை கைவிடுமாறு சந்தோஷிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் அந்த பெண்ணுடன் சந்தோஷ் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த ஆறுச்சாமி, ஆத்திரம் அடைந்து கம்பால் சந்தோஷை அடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்தவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் பயந்து போன பெண், கொழிஞ்சாம்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, சந்தோஷ் இறந்து விட்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சித்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷை ஆறுச்சாமி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






