மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கோப்புப்படம்
மனநலம் பாதித்த இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம், வல்சாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 35 வயது வாலிபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பெற்றோர் மகளை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, பக்கத்து வீட்டு வாலிபர்தான் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுபற்றி பெற்றோர் வல்சாட் போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்கத்து வீட்டு வாலிபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






