செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம் - காரணம் கேட்ட போலீசார் அதிர்ச்சி


செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம் - காரணம் கேட்ட போலீசார் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Jun 2025 1:00 AM IST (Updated: 20 Jun 2025 1:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா மாநிலத்தில் 100 அடி உயர செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.

இதனர்ல் ஆத்திரம் அடைந்த இளைஞர் அருகில் உள்ள 100 அடி உயர டவர் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இளைஞர் டவர் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர. இளைஞரிடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த இளைஞரை மீட்டனர்.

இந்த நிலையில் அவரிடம் தற்கொலைக்கு காரணம் கேட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் செய்து வைக்ககோரி கேட்டபோது பெற்றோர் வேலைக்கு செல்லும் படி கூறியதால் இந்த முடிவை இளைஞர் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story