புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1457 பேர் இடமாற்றம்


புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1457 பேர் இடமாற்றம்
x

புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,457 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,457 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வழிமுறைகள்

புதுவை கல்வித்துறையில் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இதனால் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்து வந்தன.

1,457 பேர் இடமாற்றம்

இதையடுத்து ஒரே பள்ளியில் தொடர்ச்சியாக 3 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,457 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்தில் இடம் பிடித்துள்ளனர்.

புதுச்சேரியில் 979 பேரும், காரைக்காலில் 353 பேரும், மாகியில் 39 பேரும், ஏனாமில் 88 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து வருகிற 6-ந்தேதிக்குள் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story