போலி செல்போன் விற்பனையில் மேலும் 5 பேர் சிக்கினர்


போலி செல்போன் விற்பனையில் மேலும் 5 பேர் சிக்கினர்
x

புதுவையில் விலையுயர்ந்த போலி செல்போன் விற்பனை செய்த வழக்கில் மேலும் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

புதுச்சேரி

விலையுயர்ந்த போலி செல்போன் விற்பனை செய்த வழக்கில் மேலும் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

போலி செல்போன் விற்பனை

புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள செல்போன் கடைக்கு மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களிடம் விலையுயர்ந்த செல்போனை குறைந்த விலைக்கு தருவதாக கூறியுள்ளனர். அதாவது ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போனை ரூ.10 ஆயிரத்துக்கு தருவதாக தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அந்த கடைக்காரர், அவர்கள் கொடுத்த செல்போன்களை வாங்கி பிரித்து பார்த்தார்.

அப்போது அவை சீனா தயாரிப்பில் உருவான போலி செல்போன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்காரர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்போனை கொடுத்த கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த உமரூல் பரூக் (வயது 28) என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வந்தனர்.

5 பேர் சிக்கினர்

இதற்கிடையே கைதான உமரூல் பரூக்கிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது விலையுயர்ந்த செல்போன் என்று கூறி சீனா தயாரிப்பில் உருவான போலி செல்போன்களை கடைக்காரர்கள், தொழிலாளர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story