புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது

புதுவையில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஏதாவது ஒரு வழியில் கொண்டு வந்து இவற்றை புழக்கத்தில் விடுவது குறைந்தபாடில்லை. பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை அமலில் இருந்து வரும் நிலையில் அங்கும் போதை பொருட்கள் கொடிகட்டி பறக்கிறது. இதை தடுக்க அவற்றை விற்கும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் புகையிலை பொருட்கள் விற்றதாக வெங்கடேசன் (வயது59), பெரியகடை எஸ்.வி.படேல் சாலை கருணாகரன் (50), முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் ஜீவரத்தினம் (67), சோலைநகர் திருநவுக்கரசு (60), காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் கஸ்தூரி (68), ஒதியஞ்சாலை சோனாம்பாளையம் அந்தோணி (75), திருக்கனூர் சாகுல் அமித் (83), காட்டேரிக்குப்பம் உபத்துல்லா (43), வில்லியனூர் வீரராஜ் (51) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6,410 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட