சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம்


சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம்
x

புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு:வழங்ககோரி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அன்பழகன் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியின்போது 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. புதுவையிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு சுமார் 389 மருத்துவ இடங்கள் அரசின் இடஒதுக்கீடாக கிடைத்துள்ளது. அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலருக்கே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

எனவே தமிழகத்தைப்போல் புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story