போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது


போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது
x

திரு.பட்டினம் அருகே போதை பொருள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திரு.பட்டினம்

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மலையன்தெருவில் ராஜேந்திரபிரசாத் நடத்தி வரும் கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது, போதை புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திர பிரசாத்தையும் கைது செய்தனர்.


Next Story