நுண்கலை துறையில் மாணவர் சேர்க்கை


நுண்கலை துறையில் மாணவர் சேர்க்கை
x

புதுவை பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை பாரதியார் பல்கலைக்கூடம் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறையில் ஆண்டுதோறும் 30 இடங்களுக்கான சேர்க்கை நடந்து வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரி பல்கலைக்கழகமானது மேலும் 10 இடங்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே இருந்துவந்த 30 இடங்களில் 29 இடங்கள் பூர்த்தியடைந்து மேலும் 11 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் சென்டாக் மூலம் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story