போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
x

திருநள்ளாறு புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை சார்பில் போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருநள்ளாறு

புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, இன்று திருநள்ளாறு சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை, திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில், மாணவ-மாணவிகள் போதைபொருளுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரசாரம் செய்தார்கள். பேரணியில், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி ரெங்கநாதன், விரிவாக்க அலுவலர் மாரியப்பன், பள்ளியின் துணை முதல்வர் அசோகன் மற்றும் கிராம சேவகர்கள், மகளிர் கூட்டமைப்பினர், பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story