மருத்துவ படிப்பு: வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மருத்துவ படிப்பு: வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 6:19 PM GMT (Updated: 10 Oct 2023 8:27 AM GMT)

இளநிலை மருத்துவ படிப்பிற்கு வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை படிப்புகளுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (www.centacpuducherry.in) மூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது, நீட் தரவரிசையில் அகில இந்திய கலந்தாய்வு தரவரிசையை குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story