டெம்போ டிரைவர் மீது தாக்குதல்


டெம்போ டிரைவர் மீது தாக்குதல்
x

முதலியார்பேட்டை அருகே டெம்போ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

முதலியார்பேட்டை அவ்வை நகரை சேர்ந்தவர் பழனிவேல், டெம்போ டிரைவர். இவர் சம்பவத்தன்று மாலை ராஜா தியேட்டர் அருகில் இருந்து டெம்போவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது அங்கு வந்த ரமேஷ், கலை ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், கலை ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story