தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க பூமிபூஜை


தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க  பூமிபூஜை
x

பாகூர் மூலநாதர் கோவில் தீர்த்தவாரிக்கு புதிய மண்டபம் அமைக்க பூமிபூஜை நடந்தது.

பாகூர்

பாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆற்றுத் திருவிழாவையொட்டி சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சாமிகள் மேளதாளத்துடன் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆற்றங்கரையில் அருகே ஸ்ரீ மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கருங்கற்களால் ஆன மண்டபத்தை அகற்றிவிட்டு, அதன் அருகில் புதிய மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை நடந்தது. பாகூர் தாசில்தார் பிரிதிவ், நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தனர். ஆனால் இதுவரை கல்மண்டபம் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story