2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x

காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி

காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

மனு தாக்கல்

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சார்பதிவாளர் சிவசாமி, நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி (அப்போதைய செட்டில்மெண்ட் அதிகாரி) உள்பட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கூடுதல் தகவல் பெற ரமேஷ், பாலாஜி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

2 நாட்கள் காவல்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ரமேஷ், பாலாஜி ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்கள் 2 பேரையும் தங்களது பாதுகாப்பில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வாக்குமூலம் கொடுக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story