சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்


சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
x

புதுவை சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

புதுச்சேரி

புதுவை சட்டசபை வளாகத்தில் நிழலுக்காகவும், அழகிற்காகவும் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சட்டசபையிலிருந்து வெளியேறும் கேட் அருகில் உள்ள மரம் (தூங்குமூஞ்சி மரம்) ஒன்றின் நிழலில் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவார்கள்.

அடர்ந்து வளர்ந்த அந்த மரத்தின் கிளைகள் வாகனங்களை அடிக்கடி உரசின. இதனால் வாகனங்களில் கோடு விழும் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று வனத்துறை ஊழியர்கள் சட்டசபை வளாகத்துக்கு வந்து தாழ்வாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினா்.


Next Story