கல்வித்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


கல்வித்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x

புதுச்சேரியில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்கக்கோரி கல்வித்துறை அலுவலகம் முன்பு பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவையில் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அந்த பள்ளி மாணவிகள் வேறு பள்ளிகளில் இடம் ஒதுக்குவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெற்றோரும், மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வீரமாமுனிவர் பள்ளியில் அப்பள்ளி வகுப்புகள் செயல்படுகிறது. இந்தநிலையில் மாணவர்களுக்கு தேவையான பள்ளி கட்டிடங்களை சீர் செய்து தரக்கோரி சமூக அமைப்புகள் சார்பில் கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்தி தலைமை தாங்கினார். அலைகள் இயக்கத்தின் அமைப்பாளர் வீர.பாரதி, பிரெஞ்சிந்திய மக்கள் முன்னணி அமைப்பாளர் இருதயராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story