மது குடித்த கொத்தனார் சாவு


மது குடித்த கொத்தனார் சாவு
x

மூலக்குளத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த கொத்தனார் உயிரிழந்தார்.

மூலக்குளம்

ரெட்டியார்பாளையம் லாம்பார்ட் சரவணன் நகர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 32). கொத்தனார். அவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஹரிகரன் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story