மதுபோதையில் ரகளை; 7 பேர் கைது


மதுபோதையில் ரகளை; 7 பேர் கைது
x

புதுவையில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த அப்துல் சபிபுல்லா (வயது 30) என்பவரை பெரிய கடை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாரதி வீதி-தில்லை மேஸ்திரி வீதி சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ராஜா (45), உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த சிவ பாலசுப்பிரமணியன் (36) ஆகியோரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். மேலும் திருக்கனூர் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் மதுர பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25), காட்டேரிக்குப்பம் பகுதியில் கிளியனூர் ரவி (39), மங்கலம் பகுதியில் கடலூர் செல்லஞ்சேரி மணியரசன் (32), தவளக்குப்பம் பகுதியில் ரெட்டி சாவடி விஜய் (25) ஆகியோர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக அந்தந்த பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Next Story