தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை


தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
x

காரைக்கால் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோட்டுச்சேரி

காரைக்கால் திரவுபதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 57). மீனவர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் கஜேந்திரன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் பக்கவாத நோயால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கஜேந்திரன் கோட்டுச்சேரி நனவாய்க்கால் பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story